Categories
தேசிய செய்திகள்

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா…. அதிர்ச்சி அடைந்த மக்கள்….!!

தமிழகம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு…. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு…..

தமிழகத்தில் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. சில மாதங்களாக இதன் தாக்கம்  குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். அதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார், அதில் “அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிகுந்த அளவில் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு  அதிகரித்து  வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதன்பின் சென்னை கோயம்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனை தடுக்க திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் செல்லும்போது தடுப்பு நடவடிக்கையை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். பின்பு தேர்தல் நிகழ்வுக்கான அரசியல் கூட்டம் அதிக அளவில் நடைபெற்று வருவதால் நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் இதுவே கொரோனா தடுப்புக்கான முதற்படி. இதற்கு அடுத்து அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக இதுவரை தமிழகத்தில்  16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த வைரஸ் அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கவனிப்பு மையம் ஆரம்பித்துள்ளோம், மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கட்டாயம் தடுப்பூசியினை போட்டு கொள்ள வேண்டும். கொரோனாவின் தாக்கம்  அதிகரித்து வருவதால் இதனை மக்கள் அறிந்து அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

Categories

Tech |