பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கல்லூரியில் சக மாணவர்கள் முன்னால் ஒரு மாணவரிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் லாகூரில்உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமாவைப் போல் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்ஒருவரிடம் தன் காதலை தரையில் முட்டியிட்டு ரோஜா பூவை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.உடனே அந்த மாணவன் ரோஜா பூவை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கட்டி அணைத்து காதலை ஏற்றுக் கொண்டார் . இதனை கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ஆரவாரம் செய்தனர் . மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் பற்றி கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது .அதனால் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது .ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை . அதனால் நிர்வாகம் ,கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் இரண்டு மாணவர்களையும் கல்லூரியில் இருந்து நீக்கி அவர்கள் கல்லூரி வளாகத்தில் நுழைய தடை விதித்துள்ளது. இந்தசம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டா ஷர்தாரி கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
https://twitter.com/hamzajaved261/status/1370428799637192713