222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது….
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் கார்னிவல் 2015 ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கார்னிவல் கார் 2015 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டதன் விளைவாக, புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பல புதிய அம்சங்கள் வழங்கியுள்ளது.மேலும், இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கியா கிராண்ட் கார்னிவல் சி.கே.டி பாதை வழியாக இறக்குமதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.கிராண்ட் கார்னிவல் 2.2 லிட்டர் சிஆர்டி டீசல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது,இது ஆறு வேக தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.இதன் வருகையை பயனாளர்கள் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.