Categories
தேசிய செய்திகள்

65 வயதில் 5வது திருமணம்… அதுவும் 28 வயது பெண்ணை… முதியவரை வித்தியாசமாக கொலை செய்த மணப்பெண்..!!

65 வயதில் ஐந்தாவதாக திருமணம் செய்து ஏமாற்றிய வயதான கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர் லட்சுமணன் ராம்லால் மாலிக். இவருக்கு 65 வயது ஆகிறது. இவருக்கும் 28 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த நிலையில் லட்சுமணன் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே உள்ள நண்பன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் இவர்களுக்கு ஏற்கனவே நான்கு முறை திருமணம் செய்து அவர்களுக்கு குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் லட்சுமணன் இருக்கும் இடத்தை தேடி விசாரித்து சென்று அங்கு அவருடன் உடலுறவு கொள்வது போல் நடித்து நாற்காலியில் கட்டி வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

Categories

Tech |