வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த மற்ற அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குசாவடி சீட்டு வழங்குவார்கள். மேலும் அந்த வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ் கூறியுள்ளதாவது, அடையாள அட்டையைக் கொண்டு வாக்களிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், ஓட்டுனர் உரிமம் ,பான் கார்டு , இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் , மத்திய மாநில அரசினால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அட்டைகள், சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் அலுவலக அடையாள அட்டை இவையனைத்தும் புகைப்படத்துடன் வைத்திருந்தால் இந்த ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.