பிரித்தானிய நாட்டில் இளவரசரான பிலிப்பின் மருத்துவ சிகிச்சை பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய நாட்டின் இளவரசி எலிசபெத்தின், கணவர் இளவரசர் பிலிப் (வயது 99). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு கிங் எட்வர்ட் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இளவரசருக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்ததால், இவர் லண்டன் மருத்துவமனையில், சிறப்பு இருதய பிரிவிற்கு மாற்றப்பட்டு ,அங்கு சிகிச்சை பெற்று வந்தார் . அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட இளவரசர் ,செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்ற தகவலை ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இது தொடர்பாக ராஜ குடும்ப தரப்பினரிடமிருந்து ,அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை .