Categories
தேசிய செய்திகள்

தாய் என்றும் பார்க்காமல்…” சுத்தியலால் போட்டுத்தள்ளிய 19 வயது மகள்”… அதிர்ச்சி சம்பவம்..!!

சாகுல் பூர் என்ற கிராமத்தில் சொந்த மகளே தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், சாகுல் பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அச்சமயத்தில் வீட்டில் மிகவும் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தாயாரின் கதறல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

தாயை கொலை செய்த மகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரது தாயின் உடலை உடற்கூறாய்வு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருந்தது என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |