“என்ஜாய் எஞ்சாமி” பாடல் குழுவினருக்கு இயக்குனர் செல்வராகவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகளும், பிரபல பாடகியுமான தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய “என்ஜாய் எஞ்சாமி” பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது தமிழகத்திலேயே இந்தப் பாடல்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இப்பாடலுக்கு தீயின் தந்தையான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்ட செல்வராகவன் இப்பாடல் குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “என்ன பாடல் இது. இப்பாடலின் உருவாக்கம் மிகவும் பிடித்துள்ளது. தீ, அறிவு மற்றும் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.