அமெரிக்காவில் பாம்பு பிடி வீரர் ஒருவரை ,மலைப்பாம்பு ஒன்று தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் Nick Bishop (வயது 32). பாம்புபிடி வீரரான இவர் ப்ளோரிடா பகுதியில் மலைப்பாம்பு ஒன்றை பிடித்துள்ளார். அவர் பிடித்த மலைப்பாம்பை பற்றியும், அதன் தன்மை பற்றியும், வீடியோ ஒன்றில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்த பாம்பின் செயலைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தபோது ,திடீரென்று அந்தப் பாம்பு எதிர்பாராதவிதமாக அவரது முகத்தை தாக்கியது.
காயம் ஏற்பட்டதால் அந்த பாம்பை Bishop கீழே விட்டுவிட்டார். இதன்பின் அவர் அந்த வீடியோவை தனக்கு அடிப்பட்ட இடத்தில் வைத்து, அந்தப் பாம்பு என்னுடைய கண்ணிமைக்கும் மேல் தாக்கியதை காட்டினார். Bishop தனக்கு அடிபட்டதை பற்றி கண்டுகொள்ளாமல், பாம்பின் தன்மையைப் பற்றி கூறியுள்ளார். பொதுவாகவே பாம்புகள் மனிதர்களை வேண்டுமென்று தாக்குவதற்காக ,அதனுடைய சக்திகளை பயன்படுத்துவது இல்லை என்றும், அது இரையைப் பிடிப்பதற்காக மட்டுமே தன சக்திகளைப் பயன்படுத்தும் என்று கூறினார்.