பெங்களூரு மாநிலத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஒரு இளைஞரை ஒரு பெண் சாலையில் அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் நரகில் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வீரையா என்பவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஆபாசமாக குறும்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இன்று அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அந்தப் பெண் அவரை அடித்து உதைத்தார். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூகத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இளைஞருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.