கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஃபிரான்ஸில் வந்துவிட்டதால் பெருநகரமாக பாரிஸில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார் .
பிரான்சில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்ததாவது, நேற்று ஒரு நாளைக்கு மட்டுமே 29,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் . கொரோனா தொற்று பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பிடும் போது 4.5% அதிகரித்துள்ளதாகவும் அதிலும் தலைநகரமான பாரிசில் கொரோனா அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதனால் பாரிசில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார் .