Categories
தேசிய செய்திகள்

72 வயதிலும்… துளு மொழி தேர்வு எழுதிய ஆசிரியர்… கற்றலுக்கு வயது தடையில்லை..!!

பெங்களூருவில் 72 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் துளு மொழியில் தேர்வு எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கர்நாடக மாநிலம் துலு சாகித்ய அகாதமி, ஜெய் துலு அமைப்பு, யுவஜன வயயாமா சாகலே பண்டரிபேட்  ஆகியவை இணைந்து மொழிக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4 வாரங்கள் ஆன்லைன் பயிற்சிகளும் நடத்தி வருகின்றன. பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தேர்வு மொழி நடத்தப்பட்டது. இதில் இளம் மாணவர்களுடன் 72 வயதான என்.பி.ன் லட்சுமி என்பவர் தேர்வு எழுதினார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்.

ஆனாலும் துளு மீது அவருக்கு இருந்த ஆர்வம் முதுமையிலும் அவர் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த தேர்வினை அவருடன் சேர்ந்து 53 மாணவர்கள் எழுதினர். அதில் ஆசிரியர் அந்த ஓய்வு பெற்ற ஆசிரியரை அனைவருக்கும் கூறி, இவர்களை போன்று எடுத்துக்காட்டாக இருங்கள் என்று கூறி உண்மையில் கற்றலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணருங்கள் என்று கூறினார்.

Categories

Tech |