ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 20 நாட்களில் சுமார் 40,000 நிலநடுக்கங்கள் பதிவானதால் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடு ஐஸ்லாந்தில் 40,000 நிலநடுக்கங்கள் கடந்த 20 தினங்களில் மட்டும் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவைத் தாண்டி பல நிலநடுக்கங்கள் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட அனைத்து நிலநடுக்கங்களையும் விட, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியில் இருந்து மார்ச் 15ஆம் தேதி வரையிலான ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பல மடங்கு அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான நிலநடுக்கம் கடந்த 8 தினங்களில் மட்டும் பதிவானதாக கூறப்படுகிறது.
அதாவது வழக்கமாக ஓராண்டு முழுவதும் சுமார் 1000 முதல் 3000 வரையிலாக தான் நிலநடுக்கங்கள் பதிவாகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக எரிமலை வெடிப்புகள் அந்நாட்டில் உண்டாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.