நாகர்கோவிலில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொற்று அதிகமானதால் அதன் அண்டைப் பகுதியான குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த வைரஸ் தொற்று, நேற்று 10 பேருக்கு ஒரே நாளில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் திடிரென சோதனை மேற்கொண்டு வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் டிரைவர் கண்டெக்டர் மற்றும் பயணிகள் முககவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா என்று ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டெக்டர் முககவசம் அணியாததால் அவர்களுக்கு தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் ,அதிகாரிகள் அவர்களுக்கு முககவசம் வழங்கினர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முக கவசம் அணியாமல் செல்ல கூடாது என முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளார்.