Categories
மாநில செய்திகள்

திடீரென்று ரூ.50 கட்டணம் உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர்,தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பால் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக கட்டணம் உயர்த்தபடுவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் டிக்கெட் விலை மீண்டும் குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Categories

Tech |