பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமிஹண்ட் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டி போட்டனர். இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் 92,153 வாக்குகள் பெற்று பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் தெரசா மே நாளை பதவியை ராஜினாமா செய்கிறார். புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தெரசா மே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்