செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க திருமுருகன் காந்தி, எல்லா கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் தான் பேசுறாங்க. மக்களுக்கு விரோதமாக இருக்கிறவர்களை தனிமை படுத்துவதற்கும், மக்கள் சார்பாக இருக்கிறவர்களை ஓன்று படுத்த வேண்டும். எதிரிக்கு எதிராக இருக்கக்கூடிய எல்லாத்தையும் ஒன்று படுத்த வேண்டியது பொறுப்பு. அதை செய்யவில்லை என்றால் அதுவே எதிரிக்கு வாய்ப்பாக இருக்கும். அப்படி தான் எங்களையும் திமுக ஆதரவாளர் என சொல்லி பேசுவது அல்லது இந்த கட்சிக்கு ஆதரவாளர் என சொல்லி பேசுவது அல்லது தமிழர் இல்லை என்று பேசுவது எல்லாமே கொச்சைப்படுத்துதல் என தெரிவித்தார்.
மேலும், சக தோழமை அமைப்புகளை தோழமையாக பார்க்காத ஒன்றோடு எங்களுக்கு தோழமை இல்லை.மற்ற கட்சிகளோட திமுகவுக்கு வேறுபாடு இருக்கு. திமுக அதிகாரத்தில் இருந்த கட்சி. நாளைக்கு அதிகாரத்திற்கு வரப்போகின்ற கட்சியாக அவர்கள் மாறும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனை கிடையாது. கோரிக்கைகள் நடைமுறை படுத்தபடாததால் தான் நாங்களும் இயக்கம் கண்டவர்கள். போராட்டம் நடத்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. அவர்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கட்டும், அப்படிப்பட்ட இடத்தில் நாங்கள் துணிந்து துணை இருப்போம்.
ஈழ விடுதலைக்காக இந்திய அளவில் ஒரு நிலைப்பாட்டை அனைத்து மாநில கட்சிகளையும் இணைத்துக் கொண்டு வரவேண்டும். இதை அவர்கள் செய்யணும்னு விரும்புறோம், அதற்கான வலிமை அவர்களுக்கு இருக்கிறது. திமுக செய்யக் கூடிய அளவிற்கான தொடர்புகளும் அவர்களுக்கு இருக்கிறது. அவர் நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கிறார்கள். சர்வதேச விசாரணை இனப்படுகொலைக்காக நடத்தப்படுவதற்கு இந்திய அரசனை வலியுறுத்துவோம் என சொல்லி இருக்கிறார்கள் . அது வலியுறுத்தி அது நடக்கும் பட்சத்தில் நாங்கள் ஆதரவு குறித்து நாங்கள் பேசுவோம்.
தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. இந்திய அரசியலில் ஊழலை பிரிக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் சாதிதான். இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக இருப்பது இந்து மதத்தினுடைய சனாதனம் தான். இந்த இந்து மதத்தினுடைய சனாதனம் என்கின்ற ஊழலை எதிர்த்து யார் பேசுபவர்களும் அவர்களோடு சேர்ந்து பேசலாம். அது இல்லை என்றால் பெரிய ஊழலாக எதையும் பார்க்க முடியாது என அவர் தெரிவித்தார்.