Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதி 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் எந்த கெங்கவல்லி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதி. இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1952 முதல் 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1முறையும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. 2011ல் கெங்கவல்லி தொகுதியாக மாறிய பின்  தேமுதிக மற்றும் அதிமுக தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன. தற்போது அதிமுகவின் மருதமுத்து எம்எல்ஏவாக உள்ளார். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள கெங்கவல்லி தனி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,38,253 ஆகும். கெங்கவல்லி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என்பது புகாராக உள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் கலைநயத்துடன் கூடிய மர சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது சிற்பக் கலைஞர்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். தலைவாசலில் கட்டப்பட்டு வரும் கால்நடை ஆராய்ச்சி மையத்தில்  தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம்.

வீரகனுரில் அரசு பெண்கள் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. தலைவாசல் தினசரி சந்தையில் விலை பொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்று. வெற்று வாக்குறுதிகளாகவே தொடரும் நீண்டகால கோரிக்கைகள் இனிவரும் காலத்திலாவது நிறைவேறாதா என்ற எதிர்பார்ப்புடன் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி மக்கள் உள்ளனர்.

Categories

Tech |