காஞ்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 9 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் 2021 காண சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது . இதனை தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும்படையினரை நியமித்துள்ளனர்.
அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அரப்அலி என்பவர் காரில் வந்தவாசியிலிருந்து பெருநகரை நோக்கி சென்றுள்ளார். அந்தக் காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரமும் , ஒன்பதரை பவுன் தங்க நகையும் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அரப்அலியிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.