செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன், இந்த தொகுதியில் பொறுத்தவரையிலும் நான் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறேன் என்று சொன்னால், இந்த தொகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து மக்களும், வாக்காளர் பெருங்குடி மக்கள் அனைவரும், தங்கள் வீட்டுப் பிள்ளையாக, தங்கள் சகோதரனாக கருதி எனக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை, இதுவரையிலும் ஈட்டி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடு இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலை பொறுத்த வரையிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் அமர்வது எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற வரலாற்றை படைக்கின்ற அளவுக்கு அனைவரும் மாபெரும் வெற்றியைத் தருகின்ற அளவுக்கு மக்களுடைய மகிழ்ச்சி வெள்ளம் இன்றைக்கு இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல நம்முடைய அரசு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் அனைவரும் பாராட்டுகின்ற அளவுக்கு பாராட்டுதலைப் பெறுகின்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆகவே இயற்கையும் நமக்கு சாதகமாக இருக்கிறது. மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள். ஆகவே இந்த அரசு மக்கள்அரசாக… ஏழை எளிய அரசாக… உழைக்கின்ற அரசாக… விவசாயியின் அரசாக… நெசவாளர்களின் அரசாக… அனைத்து தொழிலை செய்து கொண்டிருக்கின்ற அரசாக இந்த அரசு அமைந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணியை பொறுத்த வரையிலும் நம்முடைய முதல்-அமைச்சர் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்த பணிகளை ஆற்ற போகிறார் என்பதை, கூட்டணி கட்சியினுடைய தலைவர்கள் ,பாரத பிரதமர், டாக்டர் அய்யா அவர்கள் அதைப்போல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள்,
அதேபோல் விவசாய சங்கத்தைச் சார்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு முகமாக நின்று நல்லாட்சி தமிழகத்தில் அமைவதற்கு ஏதுவாக அனைவரும் இணைந்து எல்லா இடங்களிலும், நம்முடைய தோழமை கட்சியில் நிற்கின்ற அனைத்து இடங்களும் 234 தொகுதியிலும், முதலமைச்சர் அவர்களுடைய ஆணையை ஏற்று துணை முதலமைச்சர் ஆணையை ஏற்று அயராது அனைவரும் உழைக்க முன் வந்து இருப்பதோடு, தங்கள் உயிரை பணயம் வைத்து வெற்றி வாகை சூடுவோம் அதற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.