நடிகர் கார்த்தி தனது ஆண் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் கார்த்தி புளிய மரத்தில் தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது சிறுவயது ஆசை நிறைவேறியதாக தெரிவித்திருந்தார்.
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்…
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X— Karthi (@Karthi_Offl) March 17, 2021
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக்கு ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது . தற்போது அந்த குழந்தைக்கு ‘கந்தன்’ என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.