Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு…? – வெளியான மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேசுகையில், முன்பு இருந்தது போல தமிழகத்தில் கொரோனா இல்லை. அதனால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |