Categories
Uncategorized உலக செய்திகள்

நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக எடுத்து வந்த இளவரசர் ..!!பிரச்சனையில் சிக்கினார் ..!!

பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா  நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது.

ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்யதது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக நேபாளத்தின் மருந்து நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |