Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிளில் மோதிய மினி லாரி…. ஒருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஆண்டிப்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆலங்குளம் அருகே கரும்பனூர்  பகுதியில் அப்பாத்துரை( வயது 60 )என்பவர்  தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அப்பாத்துரை தனது மனைவியுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டிப்பட்டி விளக்கு பகுதியில் சென்று கொடிருக்கும் பொழுது எதிரே வந்த  மினி லாரி  திடிரென அவர்கள் மீது  மோதியதால் அப்பாத்துரை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி  ரதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலங்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |