Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா … சுகாதாரத் துறை எச்சரிக்கை …மக்களே உஷார் …!!!

தமிழ்நாட்டில் கொரோனா  தொற்றானது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 867 பேருக்கு தொற்று  ஏற்பட்டதாக தமிழக சுகாதார துறை தெரிவித்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனா  தொற்றானது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு மேலாக, அனைத்து உலக நாடுகளிலும் ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டு கொரோனாவால்  உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு, மக்கள்  ஊரடங்கால் வீட்டிற்குள் முடக்கப்பட்டன. மேலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பணமின்றி, பொருளாதார நெருக்கடியில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதன்பின்  தொற்றின் வீரியமானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வந்தது. ஊரடங்கு தளர்வு களும் ,படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.ஆனால் கடந்த 12 நாட்களில் தொற்றின்  எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து காணப்படுகிறது. இதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம்  ,செங்கல்பட்டு, திருப்பூர் ,திருவள்ளூர் ,கோவை , தஞ்சாவூர் மற்றும்  நாகை ஆகிய மாவட்டங்களில் தொற்றின்  எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரே நாளில்  சுமார் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ,முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இவ்வாறு அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றால் தமிழகத்தில் 8 ,61, 429 பேர்   பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 5 பேர் நேற்று உயிரிழந்த நிலையில் மொத்தமாக 5 ,566 பேர் இந்த தொற்றால்  இறந்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா  பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |