நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் சீமான் காட்டுமன்னார்கோவிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.