சீனாவில் ஏற்படும் வசந்தகால புயலால் பெய்ஜிங் தலைநகரம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது .
சீனாவில் வசந்த காலத்தில் வழக்கமாக புழுதிப்புயல் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்தும்.அதேபோல் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் தற்போது கடுமையான புழுதிப்புயல் உருவாகியுள்ளது. இப்புயல் சீன பாலைவனத்திலிருந்து கிழக்குப்பகுதி வரை மணல் பறக்கும் தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலை விட இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன.
இந்த புயலின் தாக்கத்தால் பெய்ஜிங் வடப்பகுதி முழுவதும் காற்று மாசுபாடு ஏற்பட்டு மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. இந்த புயலினால் மக்களின் அன்றாட வாழ்வும் போக்குவரத்தும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மூச்சு மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். புழுதிப்புயல் தாக்கததால் மஞ்சள் நிறத்துடன் காட்சியளிக்கக் கூடிய பெய்ஜிங் நகரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.