Categories
மாநில செய்திகள்

வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கிகள், கல்லூரிகள், பள்ளிகளில் மக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் தான் கொரோனா அதிகளவில் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |