நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வருவாயை இழந்து வீடுகளுக்குளேயே முடங்கி கிடந்தனர். கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தன. இந்நிலையில் இந்தியாவும் பொருளாதார இழப்பை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் பலரும் தங்களுடைய வேலையை இழந்தனர். இந்நிலையில் கொரோனாவால் கடந்த வருடம் 2020 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேலை இழந்த 71 லட்சம் பேரில் பிஎப் கணக்குகள் மூடப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே 2019 ஆம் ஆண்டில் 66,66, 563 பேரின் கணக்குகள் மூடப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 8 மாத இடைவெளியில் குறிப்பாக 2020ல் அக்டோபர் மாதத்தில் 11, 18, 751 பேரின பிஎப் கணக்குகள் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.