தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் மற்றும் திருப்பூர் லட்சுமி நகர் மக்கள் நீதி மையம் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோரின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி யாராக இருந்தாலும் கருப்பு பணம் வைத்திருந்தால் ரைடு நடைபெறும் என்று எச்சரித்துள்ளார்.