நாவல் பழம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாவல் மரத்தில் காய்க்கக்கூடிய பழம், இலை, பூ, பட்டை, கொட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சிறிது துவர்ப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து போன்ற அதிகப்படியான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனுடைய மருத்துவகுணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நாவல் மரத்தின் கொழுந்தை எடுத்து சாறாக்கி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறுநீர் பிரச்சினை இருப்பவர்களுக்கு நாவல் பழத்தை பிழிந்து அந்த சாற்றை 3 தேக்கரண்டி எடுத்து அதோடு ஒரு கைப்பிடி சர்க்கரை கலந்து குடித்தால் சரியாகிவிடும்.
நாவல் பலத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை சரியாகும். நாவல் பழம் ஜீரண சக்தியை கொடுக்கிறது.
இதை காசாயம் செய்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும், பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.
நாவல் பழக்கொட்டைகளை காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும், சிறுநீரகக் கற்கள் கரைக்கவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் பயன்படுகிறது.
நாவல் பழத்தில் புற்றுநோய் செல்களை அளிக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட் உள்ளதால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.