Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரொம்ப நல்லவன்….அதான் பாஜகவில் சீட்…. வேகமா போய்கிட்டு இருக்கோம்…!!

சகிமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர்,  என்னை வேட்பாளராக அறிவித்ததும், போராட்டம் நடத்தியவர்கள் எல்லாருமே என் நண்பர்கள் தான் .ஏற்கனவே சொன்ன மாதிரி தான், உங்களை வேலை  விட்டு திடீரென்று எடுக்கும்போது ஒரு சின்ன மன வருத்தம் வரும்  அல்லவா ? காரணத்தை தெரிந்து கொண்டால் சரியாய்டும்.

அது மாதிரி, அதுதான் விஷயமே தவிர  அவர்களே வந்து எங்களை சந்தித்து எல்லோருமே சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. எங்களுடைய வேகம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மிக வேகமாக போய்க் கொண்டிருக்கின்றோம்.பாஜகவில் இணைந்ததும் சீட் கொடுக்க காரணம் என்ற கேள்விக்கு நான் ரொம்ப நல்லவன் என்று சொல்கிறேன் ,அதுதான் விஷயம்.

கொரோனா தடுப்பூசியை விமர்சித்தி எதிர்க்கட்சி எல்லாம் தடுப்பூசி போட்டுகொண்டு போட்டோ எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள்., வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். நோய் வந்துநாம் அவதிப்பட்டு எத்தனை இறப்புகளை பார்த்திருப்போம். எனது மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட கேஸ்களை பார்த்திருக்கிறோம்.

நேரடியாக பேஷண்ட் டை தொட்டு வைத்தியம் பார்த்த டாக்டர் நான். என்னுடைய உடம்பில் அண்டிபாடிஸ்  நிறைய இருக்கிறது. கொரோனா தடுப்பூசி காலத்தின் அவசியம்,  கட்டாயம். விமர்சனம் செய்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும், தடுப்பூசி  போட்டு அதை போட்டோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டே இருக்கிறார்கள்,  தடுப்பூசி போடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |