பாஜகவில் இணைந்த சரவணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, நான் பாஜகவிடம் முதலிலிருந்தே பேசி கொண்டு இருப்பதாக சொலவ்து உண்மையல்ல. மதுரையில் இருக்கின்ற திமுகவிடம் கேட்டீர்கள் என்றால் ,அவர்கள் யாருக்கு சாதகமாக பேசுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். நான்ஏற்கனவே ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்திருக்கிறேன்.
வெற்றி பெற்ற உறுப்பினராக ஐந்து வருடத்தில் பெயர் வாங்கக்கூடியதை நான் இரண்டு வருடத்தில் திருப்பரங்குன்றத்தில் பெயர் வாங்கி இருக்கின்றேன். மக்களுக்கு இரண்டு தண்ணீர் லாரி நானே சொந்தமாக வாங்கி ,இன்றும் சப்ளை செய்து கொண்டு இருக்கின்றேன். நேற்று கூட ஒரு பெண்மணி என்னிடம் அழுதார்கள் . அப்போ இனிமேல் எங்களுக்கு நீங்கள் எம்எல்ஏ கிடையாதா ? தண்ணீர் கிடைக்காதா ? என்று கேட்டார்கள்.
நான் இருக்கிற வரைக்கும் தண்ணி வரும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இன்றைக்கும் அந்த லாரி போய்க்கொண்டிருக்கிறது. பிள்ளைகளுக்கு…. காலேஜ் படிக்கின்ற மாணவர்களுக்கு குரூப் 4தேர்வுக்காக பிரீ கோசிங் சென்டர் நடத்தினேன். என்னால் முடிந்த அளவுக்கு பல உதவிகளை எம்எல்ஏ என்கின்றதை தாண்டி ஒரு தனி மனிதனாகவும், நான் ஒரு சமூக ஆர்வலராக, நான் வைத்துள்ள தொண்டு நிறுவனத்தின் மூலம் இன்னும் செய்து கொண்டிருக்கின்றேன் .இப்படி பல விஷயங்கள் கூட பாரத தலைமைக்கு என்னை வேட்பாளராக அறிவிப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தது.