தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ நெருங்கி உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அதிகரிப்பு பகுதிகளை கண்டறிந்து கடும் கட்டுப்பாடு விதிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.