Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக சரியில்லை…! இப்படி தான் எதிர்க்கும்…. களமிறங்கிய மயில்சாமி

2021 சட்டமன்ற தேர்தல் விருகப்பக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மயில்சாமி போட்டியிடுகின்றார். இவர் செய்தியாளர்களை சந்தித்த போது, நான் சுயேட்சையாக நிற்கிறேன். நான் எந்த கட்சிக்கும் விரோதமானவன் கிடையாது. நான் எல்லாக் கட்சித் தொண்டர்களுடன் நல்ல அன்பாக பழகுவேன்.  என்னிடமும் அவர்கள் அன்பாக பழகுவார்கள்.

தீடிரென இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டீர்களே என்பார்கள். இதை திட்டமிட்டு எப்படி செய்யமுடியும் ? பண்ண முடியாது.பெரிய பெரிய கட்சிகள் தான் முடிவு செய்வார்கள். சுயாட்சியா நிற்பவர்கள் ஒருத்தர்  முடிவு செய்துவிட்டால் சுயேச்சையாக நின்று விடுவார்கள். பொதுவாக இந்த ஏரியா மக்களுடன் ரொம்ப நெருங்கிப் பழகுபவன். என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

சும்மாவே செய்து கொண்டு இருக்கிறோம். பொறுப்புகளில் இருந்தால் இன்னும்  கொஞ்சம் நல்லா பண்ணலாம் என்றுதான் தவிர, வேறு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.அதேநேரத்தில் மாநில அரசும்,  மத்திய அரசும் மக்களுக்கு  ஃப்ரீடம் கொடுக்கல் என்கிற மனவேதனை எல்லோருக்கும் இருக்கிறது. அதற்க்கு  எதிர்ப்பு  என கட்ட வேண்டும் என்றால் இந்த மாதிரி தான் காட்ட முடியும் என மயில் சாமி தெரிவித்தார்.

Categories

Tech |