சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.
தபால் அலுவலகம் சில நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றது. தபால் நிலையத்தில் சில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தபால் அலுவலகங்கள் பல வகையான திட்டங்களை வாடிக்கையாளருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. அதில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம்.
இந்த திட்டத்தின் கீழ் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். 2020 ஏப்ரல் 1 முதல் கிஷான் விகாஸ் விழாவில் ஆண்டுதோறும் 6.9 சதவீதம் வட்டி கிடைக்கும். அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கு 7.6 சதவீத வட்டி விகிதத்தில் அரசாங்கம் செலுத்துகிறது. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பணம் பத்து ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது பணம் இரட்டிப்பாக 124 மாதங்கள் ஆகு.ம்
நீங்கள் இந்த திட்டத்தில் 5 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால் 124 மாதங்களுக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். கிஷான் விகாஸ் பத்ராவில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் டெபாசிட் செய்ய முடியும். இதில் டெபாசிட் செய்ய வயது வரம்பு தேவையில்லை. இந்த திட்டத்தின்கீழ் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் டெபாசிட் செய்ய முடியும். அதிகபட்சம் மூன்று பெரியவர்களுடன் கூட்டு கணக்கில் பத்து வயதுக்கு மேற்பட்ட ஒரு மைனரை சேர்க்கலாம்.