தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்தல் நடத்தப்படாமல் ஆல் பாஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம் கடந்த 3 நாட்களாக மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பொது தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பை தவிர, 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.