Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு மாஸ்க் தான்… அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த யூடியூப் பிரபலம்…!!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமிய விருது வழங்கும் விழாவில் பியூட்டி பிரபலம் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக்கோரி போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக  அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ரியானா தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான  கிராமிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் யூடியூப் பிரபலமான லில்லி சிங் என்ற பெண் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த முகக்கவசத்தில் “I Stands With Farmer”  என்ற வசனம் எழுதப்பட்டு இருந்ததை பார்த்து விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த வாசகத்தின் பொருள் இந்தியா விவசாயிகளுக்கு நானும் ஆதரவளிப்பதாக அர்த்தம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்படும் என்று ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் குறித்து உணர்வை ஏற்படுத்தும் ‘கிரிட்டா தன்பெர்க்” என்பவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் போராடி வரும் அனைத்து விவசாயிகளுக்கும் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவாக நிற்போம் என்று  தெரிவித்தார்.

Categories

Tech |