புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் பழமையான வங்கியை அலகாபாத் வங்கி இந்திய வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் பேங்க் கனரா வங்கி யுடனும், ஆந்திரா பேங்க் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் நிலவி வருகிறது. டெபாசிட் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அதேபோல் வங்கிகளில் வாங்கிய கடன் என்ன ஆகும் என்று பலரும் அஞ்சி வருகின்றனர், இதில் டெபாசிட் மற்றும் வாங்கிய கடனில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று வங்கிகள் உறுதியளித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் மட்டும் ஐஎப்சி கோடு போன்றவற்றில் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது .ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வங்கி விதிமுறைகள் அமலுக்கு வந்தால் இந்த எட்டு வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகம் மற்றும் அவர்களின் பழைய காசோலை புத்தகம் இனி செல்லாது. சிண்டிகேட் மற்றும் கனரா பேங்க் வாடிக்கை யாளர்களுக்கு மட்டும் ஜூன் 30 வரையில் பழைய காசோலைப் புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கால அவகாசம் வழங்கியுள்ளது. மற்ற வங்கிகள் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முதல் புதிய காசோலைப் புத்தகத்தை மாற்றியாக வேண்டும்.
நீங்கள் இந்த வங்கிகளின் வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் செல்போன் எண், முகவரி, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர் போன்ற விவரங்களை புதுப்பிக்க வேண்டும். பழைய வங்கியுடன் இணைக்கப்பட்ட புதிய வங்கியில் இருந்து புதிய காசோலை மற்றும் பாஸ் புக் பெற வேண்டும். புதிய காசோலை புத்தகம் மற்றும் பாஸ்புக் கிடைத்தபிறகு பதிவு செய்யப்பட்ட உங்கள் வங்கியின் விவரங்களை புதுப்பித்தும் குறிப்பிட்ட வங்கியில் வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு, ஐஎஃப்சி கோடு, முகவரி, காசோலை பாஸ்புக் ஆகியவற்றை மாற்றவேண்டும். மொபைல் எண், முகவரி நாமினி விவரங்களையும் வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, வங்கி உங்களுக்கு ஒரு காசோலை புத்தகத்தைத் தருகிறது. காசோலை புத்தகத்தின் உதவியுடன் வாடிக்கையாளர் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். எனவே, கணக்கு வைத்திருப்பவர்கள் கடைசி தேதிக்கு முன்னர் புதிய பாஸ் புக் மற்றும் காசோலை புத்தகத்தை வங்கியில் இருந்து பெற வேண்டும்.