Categories
சினிமா தமிழ் சினிமா

உன்னோட ஸ்டைல படம் வேணும்…. விஜய் அடித்த போன் கால்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

விஜய்யின் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

முன்னணி  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் வசூல் என அனைத்தும் பல சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும்’இப்படத்தில் இன்னும் சில குறைகள் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் மீண்டும் விஜயுடன் இணையும் போது இப்படி நடக்காது என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னணி நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் நேரம் நெருங்கியுள்ளது. விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக தளபதி66 படத்தில் நடிக்க பலரிடம் கதை கேட்டுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு சென்றுள்ளது. எப்படி என்றால், விஜய், லோகேஷ் கனகராஜ்க்கு போன் செய்து என்னுடைய தளபதி 66 படத்திற்காக உன்னுடைய ஸ்டைலில் கதையெழுதி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதன் மூலமாக லோகேஷ் மற்றும் விஜயின் அடுத்த படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |