Categories
மாநில செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ.1000 தானா?…. சாரிப்பா ஒரு எழுத்து மாறிடுச்சு… விளக்கமளித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீமான் திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விவரம் குற்றப்பின்னணி நிலுவையில் உள்ள கடன் போன்றவைகள் உள்ள பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழக்கமாக தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு சீமான் செய்த பிரமாண பத்திரத்தில் 2019-2020 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ரூ 1000 என்று குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஈமானின் வருமானம் ஆண்டிற்கு வெறும் 1,000 ரூபாயா என்று சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது. இதற்கு சீமான் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் என்றும் எழுத்துப் பிழையால் ஆயிரம் ரூபாய் என விட்டதாகவும் ஆகவே வேட்புமனுவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்வதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |