Categories
இந்திய சினிமா சினிமா

இதுக்கு இவ்வளவு பணமா…? வாயடைக்க வைக்கும் நடிகர்களின் சம்பளம்…!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன.

இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஏழரை கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களை தொகுத்து வந்த நாகர்ஜுனா 4 அரை கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு நான்காவது சீசனை தொகுத்து வழங்கிய சிரஞ்சீவி ஒன்பது கோடிக்கு தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |