Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் பெரும் அதிர்ச்சி சம்பவம்… பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பாட்டியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் அனைவரும் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் பள்ளி சிறுவர்கள் இதனை அதிக அளவு விளையாடுகிறார்கள். ஆன்லைன் விளையாட்டின் காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் செல்போனில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட ஹரிஹரன் என்பவர் தனது பாட்டியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் மூன்றாமாண்டு படித்து வந்த ஹரிஹரன், நள்ளிரவில் திடீரென கடவுள் சொன்னதாக கூறி பாட்டி மாரியை கல்லால் அடித்துக் கொண்டுள்ளார். இது பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை மணி. உங்கள் குழந்தைகளிடம் இனிமேல் செல்போன் கொடுப்பதை நிறுத்துங்கள்.

Categories

Tech |