நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலானது மீண்டும் அதிகரித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை குறி வைத்து வருகிறது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஆலத்தூர் பகுதி பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.