Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாரும் ரெடியா…. “யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் ரிலீஸ்”… விஜய் சேதுபதி அறிவிப்பு…!!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தின் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் விவேக்,மோகன்ராஜா, கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற  முதல் பாடல் வரும் மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |