Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதை கைவிடுக…. ப. சிதம்பரம் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மட்டுமன்றி சில கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக பல செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். மேலும் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நாள் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவரும் முன்கூட்டியே முன்பதிவு செய்வது மிகவும் அவசியம்.

இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நடமாடும் முகாம்கள் மூலமாகவும், கொரோனா தடுப்பு ஊசி போட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |