Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு முடி வளர்த்திருக்க….? கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி புதுத்தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறைக்குள் தூங்கச் சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரசாந்தின் பெற்றோர் அவரை தலையில் ஏன் இவ்வளவு அதிகமாக முடி வளர்கிறாய் என்று திட்டியதும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி காவல் துறையினர் பெற்றோர் திட்டியதால் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |