Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தி ..!மகிழ்ச்சியில் மருத்துவர்கள் ..!காரணம் என்ன ?

கொரோனா தொற்று உலகையே பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது .இதனால் மக்கள் கொரோனாவிற்க்கான தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தன் பிரசவத்திற்கு முன்பு  தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாடர்னா தடுப்பூசியை பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு செலுத்திக் கொண்டார். அதனால் தற்போது அவருடைய பெண் குழந்தைக்கு இயற்கையாகவே ஆன்டிபாடி உருவாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாள் வரை இருக்கும் என்பது பற்றி தெரியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |