Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் நின்ற நபர் ..!!சந்தேகம் ஏற்பட்டு போலீசார் சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்கா துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வமான வீடான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு  வெளியே சந்தேகம் ஏற்படும் விதமாக நபரொருவர் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் காரில் இருந்துள்ளார். இதனால் வாஷிங்டன் டிசி போலீசார் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது காரில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்துள்ளது.

உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் 31 வயதான டெக்ஸாஸை சேர்ந்த பால் முர்ரே என்றும், அவர் பல குற்றசாட்டுகள் ஏற்கனவே அவர் மீது சுமத்தப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.தற்போது அவரை கைது செய்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

Categories

Tech |