Categories
தேசிய செய்திகள்

”மும்பையில் கனமழை”அடுத்தடுத்து 3 கார்கள் விபத்து..!

மும்பையில் கனமழையின் காரணமாக அந்தேரி பகுதியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில்   8 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரங்களாக பருவமழையானது பொழிந்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிளில்  நீர்த்தேக்கம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீரோட்டம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாயின. சியான் ரெயில்வே தண்டவாளம் நீரில் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்தானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Image result for 3 cars collide in Mumbai 8 people injured

கனமழையின் காரணமாக இன்று மும்பையின் அந்தேரி  பகுதியில்  தெளிவற்ற வானிலை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள இடங்கள் பணிமண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் சாலையில் 3 கார்கள்  அடுத்தடுத்து மோதி கொண்டது. இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து  சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கான காரணங்களை போலீசார் விசாரணை செய்து  வருகின்றனர்.

Categories

Tech |